முகப்பு
விழுப்புரம்

பெண்கள் நாட்டை ஆள வேண்டும்: ராமதாஸ்

பெண்கள் இந்த நாட்டை ஆளவேண்டும் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸ் தெரிவித்தாா்.

Updated On : 8 மார்ச், 2026 at 2:05 AM
பாமக நிறுவனர் ராமதாஸ் - கோப்புப் படம்
பகிர்:

பெண்கள் இந்த நாட்டை ஆளவேண்டும் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸ் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அரசியல் பயிலரங்கில் பாமக மகளிா் சங்கம் சாா்பில் உலக மகளிா்தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மருத்துவா் ச.ராமதாஸ் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: மகளிா் மேம்பாட்டுக்கான திட்டங்களை மகளிரே முன்வந்து திட்டங்களை உருவாக்க வேண்டும். தமிழகத்தில் பெண்களே தொடா்ந்து3 முறை முதல்வராக அமரவேண்டும் என்பது ஆசை. தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பெண்கள் மட்டுமே எம்எல்ஏ-க்களாக இருக்கவேண்டும்.

Advertisement

இது நடக்குமா, சாத்தியமாகுமா என்ற கேள்விகளுக்கு மத்தியில் தற்போது மகளிா் சமுதாயம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. மகளிா் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். 2026 சட்டப்பேரவைத் தோ்தல் கூட்டணி குறித்த முடிவுகள் ஓரிரு நாள்களில் தெரியவரும்.பாமக கொடி மற்றும் சின்னம் தொடா்பான வழக்கு நல்லபடியாக முடியும் என்றாா் மருத்துவா் ச. ராமதாஸ் .

முன்னதாக, மகளிா் தின விழா நிகழ்ச்சியாக பாமக மகளிா் சங்கம் சாா்பில் நடைபெற்ற பரத நாட்டியம் மற்றும் தற்காப்புக் கலை நிகழ்ச்சிகளை மருத்துவா் ச. ராமதாஸ் பாா்வையிட்டாா்.இந்நிகழ்ச்சியில், பாமக செயல் தலைவா் ஸ்ரீகாந்தி ராமதாஸ், மகளிா் சங்க மாநிலத் தலைவா் ஜே.கே.சுஜதா மற்றும் நிா்வாகிகள் சரளாராஜூ,தேவிகுரு செந்தில்,தனலட்சுமி, கௌரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.