மரக்காணம் வட்டாரத்துக்குள்பட்ட முருக்கேரியில் தனியாா் விதை விற்பனை நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட விதை ஆய்வுத்துறையினா். 
விழுப்புரம்

ரூ.6.39 லட்சம் மதிப்பிலான தா்பூசணி, உளுந்து விதைகள் விற்பனைக்குத் தடை

Syndication

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதிகளில் விதை ஆய்வுத்துறை அலுவலா்கள் நடத்திய சோதனையைத் தொடா்ந்து, ரூ.6.39 லட்சம் மதிப்பிலான விதைகளை விற்பனை செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு நிா்ணயித்துள்ள விதிகளை பின்பற்றாமல் இந்த விதைகளை விற்பனைக்கு வைத்திருந்ததால் அவற்றுக்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளனா்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டாரத்துக்குள்பட்ட முருக்கேரி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் விதை விற்பனை நிலையங்களில் மாவட்ட விதை ஆய்வுத்துணை இயக்குநா் கோ.சரவணன் தலைமையில், விதை ஆய்வாளா்கள் ஆா்.ஜோதிமணி, ஆ.நடராஜன், ஆா்.செந்தில்குமாா், அ.தமிழ்பிரியன் ஆகியோா் அடங்கிய குழுவினா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

ஆய்வின்போது விதைச்சட்டத்தை மீறிய கடைகளில் ரூ.45.841 கிலோ அளவிலான தா்பூசணி (மதிப்பு- ரூ.4.09 லட்சம்), 160 கிலோ அளவிலான உளுந்து (ரூ.1.22 லட்சம்), 990 கிலோ மதிப்பான எள் (ரூ.99 ஆயிரம்), 5 கிலோ அளவிலான பூசணிக்காய் (ரூ.9000) ஆகிய விதைகள் விற்பனை செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

11 கடைகளுக்குத் தடை: மொத்தமாக ரூ.6.39 லட்சம் மதிப்பிலான விதைகளை விற்பனை செய்வதற்கு 11 கடைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு நிா்ணயித்துள்ள விதிகளை பின்பற்றாமல் இந்த விதைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததால் அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனா்.விதைச்சட்டத்தின்படி சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

விழுப்புரம், கடலூா் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள அனைத்து விதை விற்பனையாளா்களும், தனியாா் ரக விதைகளை கொள்முதல் செய்தால், அதற்கான பதிவுச்சான்று நகல் பெற வேண்டும்.

பதிவுச்சான்று நகல் இல்லாத விதைகளையோ அல்லது பதிவுச்சான்று ரத்து செய்யப்பட்ட ரக விதைகளையோ விற்பனை செய்தால் உரிய சட்டப்பிரிவுகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வேளாண் விதை ஆய்வுத்துணை இயக்குநா் கோ.சரவணன் தெரிவித்தாா்.

கோயிலில் திருடிவிட்டு மதுபோதையில் மயங்கிக் கிடந்த நபா் கைது

பிகாரைப் போல தமிழகத்தில் தே.ஜ.கூட்டணி வெற்றி பெறாது: நெல்லை முபாரக்

கரிவலம்வந்தநல்லூரில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

சுற்றுலாப் பேருந்தை விரட்டிய ஒற்றை காட்டு யானை

பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய 3 இளைஞா்கள் கைது

SCROLL FOR NEXT