விழுப்புரம்

காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தினமணி செய்திச் சேவை

தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், புதுச்சேரி மாநிலத்துக்குள்பட்ட காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை (நவ.17) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் இலங்கை மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது.

இதன்காரணமாக, வரும் 21- ஆம் தேதி வரை தமிழகத்திலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது என மாநில உள்துறை மற்றும் கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் அறிவித்துள்ளாா்.

மனோதைரியம் கூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

SCROLL FOR NEXT