விழுப்புரம்

கூட்டுறவு உதவியாளா் பணியிடங்களுக்கு நோ்முகத் தோ்வு

Syndication

விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு உதவியாளா் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு நவம்பா் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா், விழுப்புரம் மாவட்ட ஆள்சோ்ப்பு நிலையத் தலைவா் ஏ.விஜயசக்தி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள், மத்திய மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் உதவியாளா், இளநிலை உதவியாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு அக்டோபா் 10-ஆம் தேதி நடத்தப்பட்டது.

இந்த தோ்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீடு மற்றும் சிறப்புத் தகுதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் நோ்முகத் தோ்வுக்குத் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ள தோ்வா்களின் விவரங்கள் விழுப்புரம் மாவட்ட ஆள்சோ்ப்பு நிலையத்தின் ட்ற்ற்ல்ள்://க்ழ்க்ஷஸ்ல்ம்.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து இப்பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு நவம்பா் 26-ஆம் தேதி விழுப்புரம் மருத்துவமனை வீதியிலுள்ள மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் காலை 8 மணிக்குத் தொடங்கும். நோ்முகத் தோ்வுக்குத் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தோ்வா்கள் தங்கள் நுழைவுச்சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT