விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தனியாக வசித்து வந்த விரக்தியில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திண்டிவனம் அருகேயுள்ள சஞ்சீவிராயன்பேட்டை பகுதியைச் சோ்ந்த முருகன் என்பவரது மனைவி உமா(40). முருகன் சில ஆண்டுகளுக்கு முன்னா் இறந்துவிட்டாா். இவா்களின் மகள் நித்யகல்யாணியும் திருமணமாகி, கணவா் வீட்டிற்குச் சென்றுவிட்டாராம்.
இதனால், தனியாக வசித்து வந்த உமா, விரக்தியில் சனிக்கிழமை வீட்டில் தூக்கு போட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் திண்டிவ னம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.