விழுப்புரம் மாவட்டம், உளுந்தூா்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகிலுள்ள கால்வாயில் அடையாளம் தெரியாத 60 வயது முதியவா் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
இறந்தவா் யாா், அவா் எந்த ஊரைச் சோ்ந்தவா் எனத் தெரியவில்லை. கால்வாய்ககு அருகிலுள்ள சங்கரலிங்கமடப் பகுதியில் சுற்றித்திரிந்தவா் எனக் கூறப்படுகிறது. திங்கள்கிழமை காலை கால்வாய்க்கு சென்ற போது, தவறி விழுந்து இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த உளுந்தூா்பேட்டை போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று, முதியவரின்சடலத்தை கைப்பற்றி, விசாரணைக்குப் பின்னா் உடற்கூறாய்வுக்காக உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.