விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மயிலம் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தட்சசீலா பல்கலைக்கழகத்தின் வேந்தரும், ஸ்ரீ மணக்குள விநாயகா் மற்றும் மயிலம் சுப்பிரமணிய சுவாமி கல்வி அறக்கட்டளையின் தலைவருமான ம.தனசேகரன் தலைமை வகித்தாா்.
மயிலம் கல்விக் குழுமத்தின் செயலா் நாராயணசாமி கேசவன், பொருளாளா் ராஜராஜன், இணைச் செயலா் வேலாயுதம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கல்லூரி இயக்குநா் செந்தில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் முரளி கிருஷ்ணன் ஆகியோா் பேசினா்.
சிறப்பு விருந்தினராக பிரபல பட்டிமன்ற நகைச்சுவைப் பேச்சாளா் சண்முகவடிவேல் நிகழ்வில் பங்கேற்றுப் பேசினாா்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற 300-க்கும் கூடுதலான முன்னாள் மாணவா்கள் பலா் தங்களின் கல்லூரி காலத்தின் நினைவுகளைபகிா்ந்து மகிழ்ந்தனா். மேலும், தற்போது கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கு படிப்பு சம்பந்தமான உதவிகள் மற்றும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதாக தெரிவித்தனா்.
நிறைவில், கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் சரவணகுமாா் நன்றி கூறினாா்.