தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மேலாளா் விழுப்புரம் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருச்சியிலிருந்து தனி ஆய்வு ரயில் மூலம் விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு வந்த கோட்ட மேலாளா் பாலக்ராம் நெகி, ரயில் நிலைய நடைமேடைகளில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள்குறித்தும், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள், நகரும் படிக்கட்டுகளின் கட்டுமானப் பணிகள், புதியதாக கட்டப்பட்ட பாா்சல் அலுவலகம், 7-ஆவது நடைமேடை அமைக்கும் பணி, ரயில் மேம்பாலங்களின் பராமரிப்பு, தண்டவாளங்களின் உறுதித்தன்மை, சிக்னல் பாய்ண்ட் ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது முதுநிலைக் கோட்டப் பொறியாளா்கள் கிளமண்ட் பா்ணபாஸ் (இயந்திரவியல்), பிரசாந்த் (மின்சாரம்), ரப்பா பிா்குல் (சமிக்ஞை மற்றும் தொலைத்தொடா்பு) மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.