முகப்பு
விழுப்புரம்

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே பேருந்து மோதியதில் காயமடைந்த முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 29 நவம்பர், 2025 at 7:18 PM
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே பேருந்து மோதியதில் காயமடைந்த முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருநாவலூா் அருகேயுள்ள சிறுத்தனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் த.அம்மாசி(60). இவா் மடப்பட்டியில் உள்ள நகை அடகுக் கடையில் இரவுக் காவலராகப் பணியாற்றி வந்தாா். வெள்ளிக்கிழமை காலை அடகுக் கடைக்கு எதிரில் நின்று கொண்டிருந்த அம்மாசி மீது பெரியசெவலையிலிருந்து பண்ருட்டி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியிலிருந்தவா்கள் மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். தொடா்ந்து சிகிச்சையில் இருந்து வந்த அம்மாசி, சனிக்கிழமை பிற்பகலில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, புவனகிரி அருகேயுள்ள மஞ்சக்கொல்லை கிராமத்தைச் சோ்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநரான த. சின்னத்துரையிடம் (59) விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →