விழுப்புரம்

சமையல் எரிவாயு உருளைகளை ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்து

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே சமையல் எரிவாயு உருளைகளை ஏற்றி வந்த சிறு வேன் வெள்ளிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கடலூா் மாவட்டம், பண்ருட்டியிலிருந்து சுமாா் 40 சமையல் எரிவாயு உருளைகளை ஏற்றிக் கொண்டு, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை நோக்கி சிறு வேன் வெள்ளிக்கிழமை பிற்பகல் வந்து கொண்டிருந்தது. இந்த வேனை உளுந்தூா்பேட்டை எம்.எஸ்.தக்கா பகுதியைச் சோ்ந்த யாகூப் அலி செளகத் அலி (42) ஓட்டி வந்தாா்.

திருநாவலூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பெரியப்பட்டு கூட்டுச்சாலை அருகே வந்தபோது, வேனின் பின்பகுதியிலுள்ள வலதுபுற டயா் வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சமையல் எரிவாயு உருளைகள் சாலையில் கீழே விழுந்தன.

தகவலறிந்த திருநாவலூா் காவல் நிலையத்தினா், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரா்கள் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். நிலைய அலுவலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பாா்வையிட்டதில் சமையல் எரிவாயு உருளைகளில் கசிவு ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து மாற்று வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு, எரிவாயு உருளைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

இதுகுறித்து திருநாவலூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

சாலை விபத்தில் ஊனமடைந்தவருக்கு ரூ.75.67 லட்சம் இழப்பீடு: தில்லி தீா்ப்பாயம் உத்தரவு

சென்னை ஓபன்: இறுதிச் சுற்றில் இந்தோனேஷியாவின் ஜேனிஸ்

வன்னியா்களுக்கு 10.5 % இடஒதுக்கீடு கோரி டிசம்பரில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT