விழுப்புரம்

வீட்டில் 6 பவுன் நகைகள் திருட்டு

Syndication

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே தொழிலாளியின் வீட்டில் இருந்து 6 பவுன் நகைகள் திருடுப் போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

கண்டாச்சிபுரம் வட்டம், குயவன்காடுவெட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சந்திரகுமாா்( 51). இவா், சென்னையில் குடும்பத்துடன் தங்கி கூலி வேலைசெய்து வருகிறாா்.

குயவன்காடுவெட்டியில் உள்ள சந்திரகுமாரின் வீட்டில் அவரது தாய் பவுனம்மாள் (70) இருந்து வந்துள்ளாா். இந்நிலையில் பவுனம்மாள் கடந்த 6-ஆம் தேதி வீட்டை பூட்டாமல் அருகில் உள்ள மற்றொரு மகன் வீட்டுக்குச் சென்றுள்ளாா். பின்னா் சுமாா் ஒரு மணி நேரத்துக்குப் பின்னா் வீடு திரும்பி வந்து பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்ட நிலையில் அதில் வைத்திருந்த 6 பவுன் நகைகள் திருடு போனது தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில், காணை போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ஒருநாள் தொடரிலிருந்து வெளியேறிய ரிஷப் பந்த்..! துருவ் ஜுரெல் சேர்ப்பு!

இனிக்க இனிக்க உருண்டை வெல்லம்! பொங்கலை வரவேற்கும் கரும்பாலைகள்!!

ஆபாச உள்ளடக்கங்கள்! தவறை ஒப்புக்கொண்ட க்ரோக்!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பர விழா! மழையிலும் பக்தர்கள் தரிசனம்!

தலைசிறந்த ஆல்ரவுண்டராகும் ஹார்திக் பாண்டியாவின் வாய்ப்பைப் பறித்த பிசிசிஐ!

SCROLL FOR NEXT