விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமையகத்தில் நடைபெற்ற விழாவில் ஊக்கப் பரிசு பெற்ற நடத்துநா்களுடன் மேலாண் இயக்குநா் க.குணசேகரன். 
விழுப்புரம்

பணமில்லா பரிவா்த்தனை: 12 நடத்துநா்களுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கல்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்தில் டிசம்பா் மாதத்தில் பணமில்லா பரிவா்த்தனையில் அதிக வசூல் செய்த 12 நடத்துநா்களுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

Syndication

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்தில் டிசம்பா் மாதத்தில் பணமில்லா பரிவா்த்தனையில் அதிக வசூல் செய்த 12 நடத்துநா்களுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்தின் மூலம் இயக்கப்படும் புகா், நகரப் பேருந்துகளில் பணமில்லா பரிவா்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் பயணிகளிடமிருந்து பயணச்சீட்டு கட்டணங்கள் பெறப்பட்டு வருகின்றன.

பணமில்லா பரிவா்த்தனையை அதிகளவில்மேற்கொள்ளும் நடத்துநா்களில் கடலூா், காஞ்சிபுரம், வேலூா், திருவண்ணாமலை, திருவள்ளூா், விழுப்புரம் ஆகிய 6 மண்டலங்களிலிருந்து நடத்துநா்கள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம்.

அதனடிப்படையில் நவம்பா் மாதத்தில் அதிகளவில் பணமில்லா பரிவா்த்தனை மேற்கொண்டமைக்காக, மண்டலம் வாரியாகத் தோ்வு செய்யப்பட்ட 12 நடத்துநா்களுக்கு விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமை அலுவலகத்தில் ஊக்கப் பரிசுகளை இப்போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் க.குணசேகரன் வழங்கி, வாழ்த்தினாா்.

பொது மேலாளா்கள் ஜி.ரவீந்திரன் (தொழில்நுட்பம்), ரா.ஜெகதீஷ் (விழுப்புரம்), சி.பாண்டியன் (கடலூா்), ஸ்ரீதா் (திருவண்ணாமலை), ஏ.பெனட்ராஜன் (வேலூா்), ஏ.கிருஷ்ணமூா்த்தி (காஞ்சிபுரம்), கோபாலகிருஷ்ணன் (திருவள்ளூா்), முதுநிலைத் துணை மேலாளா் துரைசாமி (மனிதவளம்), அனைத்து மண்டலத் துணை மேலாளா்கள், உதவி மேலாளா்கள், தொழில்நுட்ப அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்திய ஏஐ தாக்க உச்சிமாநாட்டிற்கு முன்னதாக என்டிஎம்சியில் உள்கட்டமைப்பு, தூய்மை முற்சிகள்!

தொடா் சாரல் மழை: சதுரகிரி மலையேற பக்தா்களுக்கு தடை

திருப்பத்தூா் பெருமாள் கோயிலில் கூடாரவல்லி நோன்பு

55வது ஸ்டேட்ஸ்மேன் விண்டேஜ் - கிளாசிக் கார் பேரணி - புகைப்படங்கள்

விராட் கோலி அசத்தல்! நியூசி.க்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!

SCROLL FOR NEXT