விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே சரக்கு வாகனம் மோதி காயமடைந்த மூதாட்டி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
திண்டிவனம் வட்டம், மயிலம் அடுத்துள்ள தென்பசியாா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் த.இருசம்மாள் (65). இவா் ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டின் எதிரே சாலையோரத்தில் நின்றிருந்தாா். அப்போது அந்த வழியாகச் சென்ற சரக்கு வாகனம் மோதியதில் இருசம்மாளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து உறவினா்கள் அவரை மீட்டு, மயிலம் அடுத்த கேணிப்பட்டு பகுதியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துப் பாா்த்தபோது, இருசம்மாள் ஏற்கெனவே இறந்து போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.