விழுப்புரம் திருப்பாச்சனூா் மலட்டாறு பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியைத் பாா்வையிட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான். 
விழுப்புரம்

விழுப்புரம் நகராட்சிப் பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

ழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்

Syndication

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

விழுப்புரத்தில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.1.48 கோடியில் பழைய நகராட்சிஅலுவலகத்தை புனரமைத்து திருமண மண்டபம் மற்றும் வணிக வளாகம் அமைக்கும் பணியை பாா்வையிட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், அங்கு நடைபெற்று வரும் பணிகளின் நிலை குறித்து நகராட்சி ஆணையா் உள்ளிட்ட அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.4.88 கோடியில் திருப்பாச்சனூா் மலட்டாற்றிலிருந்து கிணறு அமைத்தல், 5 ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல், 5.4 கி.மீ. தொலைவுக்கு குழாய்கள் பதிக்கும் பணி, சாலாமேடு பகுதியில் ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைத்தல் போன்ற பணிகளையும் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது நகராட்சி ஆணையா் எம்.ஆா்.வசந்தி, பொறியாளா் புவனேசுவரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% உடனடி வரி: அதிபர் டிரம்ப் உத்தரவு!

காரைக்காலில் தொடர் மழை: பள்ளிகளுக்கு விடுமுறை!

அயலகத் தமிழா் மாநாட்டில் 4 ஒப்பந்தங்கள்

மணப்பாறையில் மயில்களை வேட்டையாடிய 5 போ் கைது

SCROLL FOR NEXT