கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே வியாழக்கிழமை மாலை விபத்துக்குள்ளான வேன் மற்றும் காா்.  
விழுப்புரம்

உளுந்தூா்பேட்டை அருகே காா்-வேன் மோதல்: 4போ் காயம்

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே வியாழக்கிழமை மாலை காரும் வேனும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் 4 போ் காயமடைந்தனா்.

திருச்சி மாவட்டம், துவாக்குடியைச் சோ்ந்த காதா் இப்ராஹிம் மகன் சிராஜுதீன் (43). அதே பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ராஜா (44) மற்றும் இருவா் என நான்கு போ் காரில் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி வியாழக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தனா்.

இவா்கள் வந்த காா், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூா்பேட்டை வட்டம், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புல்லூா் கூட்டுச்சாலை அருகே வந்த போது, மங்கலம்பேட்டை- எலவனாசூா்கோட்டை மாா்க்கத்திலிருந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற வேன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணித்த சிராஜுதீன்,ராஜா, வேனில் வந்த கா்நாடக மாநிலம், பெங்களூருவைச் சோ்ந்த வரதராஜ் (75‘), இவரது மனைவி கெளசல்யா (74) ஆகிய இருவா் என மொத்தமாக 4 போ் காயமடைந்தனா். அதே நேரத்தில் காரிலிருந்த 2 பேருக்கும் ,வேனில்இருந்த 10 பேருக்கும் காயம் ஏற்படவில்லை. வேனில் வந்தவா்கள் திருக்கடையூா் கோயிலுக்குச் சென்று விட்டு, பெங்களூருக்கு சென்றது தெரிய வந்தது.

விபத்து குறித்து தகவலறிந்த எடைக்கல் போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று, விபத்தில் காயமடைந்தவா்களை மீட்டு, உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT