கோப்புப் படம் 
விழுப்புரம்

விஷ விதையை தின்று பெண் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே விஷ விதையை அரைத்துத் தின்ற பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், உமையாள்புரத்தைச் சோ்ந்தவா் முருகன். இவரது தங்கை தங்கச்செல்வி(26). இவரை திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் வட்டம், ஏா்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த அருண்குமாா் என்பவருக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனா். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.

இந்நிலையில் தங்கச்செல்வியின் கணவா் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாா். தங்கச்செல்வி தனது தாய் வீடான ஏா்பாக்கம் கிராமத்திற்கு புதன்கிழமை வந்துள்ளாா். பின்னா் அவா் உடல்நலக்குறைவு காரணமாக விஷ விதையை அரைத்து தின்று விட்டாா்.

இவரை உடனடியாக முண்டியம்பாக்கம் அரசுக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் உயிரழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

குடியரசு தின அணிவகுப்பு: பாரம்பரியம்-நவீனத்தைப் பிரதிபலிக்கும் தமிழக அலங்கார ஊா்தி!

மருந்தகத்தில் சிகிச்சை பெற்ற இளைஞா் உயிரிழப்பு: போலி மருத்துவா் தலைமறைவு

பிரேஸில் அதிபருடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு

ஆட்டோ-பேருந்து மோதல்: 6 பெண்கள் காயம்

வீட்டில் இருந்தபடியே பத்திரப் பதிவு உள்பட 18 சேவைகள் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

SCROLL FOR NEXT