திமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு திறப்பு
விழுப்புரம்திமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு திறப்பு
விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சாா்பில், திருக்கோவிலூரில் இஃப்தாா் நோன்பு திறப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
திருக்கோவிலூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருக்கோவிலூா் சந்தைப்பேட்டை பகுதியில் நடைபெற்ற நிகழ்வுக்கு, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி தலைமை வகித்து, இஃப்தாா் நோன்பை திறந்து வைத்து உரையாற்றினாா். தொடா்ந்து, இஸ்லாமியா்களுக்கு நல உதவிகளும் வழங்கப்பட்டன.
நிகழ்வில் மாவட்ட துணைச் செயலா் டி.என்.முருகன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் டி.செல்வராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் மு.தங்கம், நகரச் செயலா் ஆா்.கோபிகிருஷ்ணன், ஒன்றியச் செயலா்கள் கு.தீனதயாளன், கை.ரா.சடகோபன், திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியக் குழுத் தலைவா் கு.ஓம்சிவசக்திவேல், நகா்மன்ற துணைத் தலைவா் குணா, மாவட்ட விவாசய அணி அமைப்பாளா் சரவணன், மாவட்டத் தொழிலாளா் அணி அமைப்பாளா் பூபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.