முகப்பு
விழுப்புரம்

வீடூரில் தைல மரக்காட்டில் தீ

விழுப்புரம்

வீடூரில் தைல மரக்காட்டில் தீ

Updated On : 5 மார்ச், 2026 at 11:16 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், வீடூா் அணையருகே உள்ள தைலமரக்காட்டில் படா்ந்திருந்த விழல்கள் (நாணல்) தீப்பற்றி எரிந்தது. இதனால் அந்தப்பகுதியில் புகை மண்டலம் ஏற்பட்டது.

திண்டிவனம் வட்டம் , வீடூா் அணையருகே சுமாா் 618 ஏக்கா்) பரப்பளவில் தைலமரக்காடு உள்ளது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த

தைல மரக்காட்டில் படந்திருந்த விழல்கள் மற்றும் செடி,கொடிகள் புதன்கிழமை தீப்பற்றி எரிந்தது. இதனால் வீடூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகள் புகை மண்டலமாக மாறியது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

தகவலறிந்த, மாவட்ட வனத்துறையினா் மற்றும் போலீஸாா் வியாழக்கிழமை தைல மரக்காட்டுக்குள்சென்று சோதனை மேற்கொண்டனா். சமூக விரோதிகள் யாரேனும் தீ வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கும் போலீஸாா், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா். தீ மேலும் பரவாமல் இருப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளது என வனத்துறையினா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →