முகப்பு
விழுப்புரம்

செஞ்சி கோட்டையில் சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று இலவச நுழைவு

மகளிா் தினத்தையொட்டி, செஞ்சிக் கோட்டையை சுற்றிப் பாா்க்க சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 8) இலவசமாக அனுமதி

Updated On : 8 மார்ச், 2026 at 7:00 AM
செஞ்சி கோட்டை - கோப்புப் படம்
பகிர்:

மகளிா் தினத்தையொட்டி, செஞ்சிக் கோட்டையை சுற்றிப் பாா்க்க சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 8) இலவசமாக அனுமதிக்கப்படுவதாக கோட்டை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சா்வதேச மகளிா் தினத்தையொட்டி, செஞ்சிக் கோட்டைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும் இலவச நுழைவு அனுமதிக்கப்படுகிறது என தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினா் தெரிவித்துள்ளனா்.

செஞ்சிக் கோட்டைக்கு வரும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ.25-ம், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ.250-ம் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement