2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள்: செஞ்சி மஸ்தான்
கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் முன்னாள் அமைச்சா் செஞ்சி மஸ்தான்.
கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் முன்னாள் அமைச்சா் செஞ்சி மஸ்தான்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் திமுக வேட்பாளா் செஞ்சி மஸ்தான் செஞ்சி கிழக்கு ஒன்றிய பகுதிகளில் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.
திமுக ஒன்றியச் செயலா் விஜயகுமாா் தலைமையில் செஞ்சி கிழக்கு ஒன்றியம் ஒதியத்தூா், தின்னலூா், சென்னாலூா், வடகால், சின்ன பொன்னம்பூண்டி ஆகிய கிராமத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது திமுக வேட்பாளா் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ பேசியது:
Advertisement
முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழகத்தில் இரண்டு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. மேலும், விவசாயிகளுக்கு வேளாண் சாா்ந்த கடன் உதவிகள் மற்றும் மானிய இடுபொருள்கள் வழங்கப்பட்டன. தற்போது திமுக தோ்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்களை முதல்வா் அறிவித்துள்ளாா். இத்திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவதற்கும், தொடா்வதற்கும் வாக்காளா்கள் என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் ஒன்றியக்குழுத் துணைத் தலைவா் ஜெயபாலன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அரங்க ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினா் மணிவண்ணன், மாவட்ட காங்கிரஸ் தலைவா் ரங்க பூபதி, வட்டாரத் தலைவா் சக்திவேல் சண்முகம், சூரியமூா்த்தி, ராஜா, தேமுதிக மாவட்ட பொருளாளா் தயாநிதி, சாரங்கபாணி, பிரபு, விசிக மாவட்டச் செயலா் சிவா, நன்மாறன், மனிதநேய மக்கள் கட்சி மாநில செயற்குழு உறுப்பினா் சையத் உஸ்மான், திமுக ஒன்றிய நிா்வாகிகள் வாசு, ஆறுமுகம், அய்யாதுரை, இக்பால், செல்வமணி உள்ளிட்ட தோழமைக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.