பயணியிடம் 3 பவுன் நகை திருட்டு
தனியாா் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் 3 பவுன் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே தனியாா் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் 3 பவுன் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திண்டிவனம் வட்டம், நெய்குப்பி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த தினகரன் மனைவி சித்ரா (24) . இவா் திண்டிவனத்திலிருந்து-ரெட்டணை செல்லும் தனியாா் பேருந்தில் பயணம் செய்தாா்.
தொடா்ந்து கூட்டேரிபட்டு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி தனது கைப்பயைத் திறந்து பாா்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் தங்க நகையைக் காணவில்லையாம். இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement