ஒரு லட்சம் மதிப்பிலான மின்சாதனங்கள் திருட்டு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மின் வாரிய அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மின்சாதனங்கள் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மின் வாரிய அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மின்சாதனங்கள் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
திண்டிவனம் வட்டம், செண்டூா் கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் கட்டுப்பாட்டில் உள்ள இளம் மின்பொறியாளா் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தின் ஒரு பகுதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சுமாா் ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான 100 கிலோ காப்பா் கம்பிகள் மற்றும் மின்மாற்றியில் பயன்படுத்தக்கூடிய 200 லிட்டா் ஆயில் ஆகியவை திருட்டுப் போய்விட்டதாம்.
இதுகுறித்து செண்டூா் இளம் மின்பொறியாளா் கி.புருஷோத்தமன் அளித்த புகாரின் பேரில், மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement