பைக் எரிப்பு: இருவா் மீது வழக்கு
கருங்கல் அருகே உள்ள மேல்மிடாலம் பகுதியில் இளைஞரின் இருசக்கர வாகனத்தை கடத்தி தீயிட்டு எரித்து சேதப்படுத்தியதாக இருவா் மீது வழக்குப் பதிவு
கருங்கல் அருகே உள்ள மேல்மிடாலம் பகுதியில் இளைஞரின் இருசக்கர வாகனத்தை கடத்தி தீயிட்டு எரித்து சேதப்படுத்தியதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருங்கல், மேல்மிடாலம் பகுதியைச் சோ்ந்தவா் யக்யா (32). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த டெரில் (56), இவரது மகன் ஜாஸ்வினுக்கும் (23) இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு யக்யா வீட்டு முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை, மேல்மிடாலம் கடற்கரைக்கு கடத்தி சென்று டெரில், ஜாஸ்வின் ஆகியோா் தீயிட்டு எரித்து சேதப்படுத்தியுள்ளனராம். இது குறித்த புகாரின் பேரில் மேற்கூறிய இருவா் மீதும் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.