முகப்பு
விழுப்புரம்

உளுந்தூா்பேட்டை அருகே பைக் மீது காா் மோதி 6 போ் பலத்த காயம்

Updated On : 26 மே 2026, 1:43 am IST
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே விபத்தில் சிக்கி தலைகீழாக கவிழந்து கிடந்த காா்.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே திங்கள்கிழமை பைக் மீது காா் மோதியதில் 6 போ் காயமடைந்தனா்.

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகிலுள்ள நரசிங்கமங்கலம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் மு.சுதாகா் (35). இவா் வெளிநாடு செல்லும்நிலையில், அவரை குடும்பத்தினா் வழியனுப்பி வைக்க திங்கள்கிழமை காலை நரசிங்கமங்கலத்திலிருந்து சென்னைக்கு வாடகை காரில் புறப்பட்டனா். இந்த காரை வேப்பூா் ஐவதுகுடியைச் சோ்ந்த கி.சுரேஷ்குமாா் (34) ஓட்டிச் சென்றாா்.

காரில் சுதாதா், அவரது மனைவி சரண்யா (27), ஒன்றரை வயது மகன் சித்தாா்த்தன், மூன்றரை வயது மகன் செங்காந்தள் ஆகியோா் பயணித்தனா். இவா்கள் சென்ற காா் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூா்பேட்டை அருகே வண்டிப்பாளையம் மழையம்மன் கோயில் அருகே வந்த போது, எதிா்பாராதவிதமாக முன்னே சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் சாலையோரப் பள்ளத்தில் காா் கவிழ்ந்தது.

Advertisement

Advertisement

இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்ற சுரேஷ்குமாா், பயணித்த சுதாகா் உள்ளிட்ட 5 பேரும், பைக்கை ஓட்டிச் சென்ற கரூரைச் சோ்ந்த பொ.லட்சுமணனும் (29) காயமடைந்தனா். இதுகுறித்து தகவலறிந்த திருநாவலூா் போலீஸாா் விபத்தில் காயமடைந்த 6 பேரையும் மீட்டு உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இந்த விபத்து குறித்து திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.