சிக்னல் சீரமைப்புப் பணி தீவிரம்
பண்ருட்டி நகரில் நான்கு முனை சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னல்கள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கடலூர்சிக்னல் சீரமைப்புப் பணி தீவிரம்
பண்ருட்டி நகரில் நான்கு முனை சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னல்கள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பண்ருட்டி நகரில் நான்கு முனை சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னல்கள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
வியாபார நிமித்தமாக வெளியூரைச் சேர்ந்தவர்களும், அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்து கொள்ள சுற்றுவட்டப் பகுதியைச் சேர்ந்தவர்களும் பண்ருட்டிக்கு வந்து செல்கின்றனர். இதனால் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.
மேலும், கடலூர் - சித்தூர் நெடுஞ்சாலையும், சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையும் பண்ருட்டி நகரின் மையப் பகுதியில் (நான்கு முனை சந்திப்பு) சந்தித்து செல்கின்றன.
இச்சாலை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்துச் செல்வதால் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது.
போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தவும், நெரிசலைத் தவிர்த்து விபத்து ஏற்படாமல் இருக்க அமைக்கப்பட்ட சிக்னல் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக செயல்படாமல் இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமப்படுகின்றனர்.
இது குறித்து தினமணி நாளிதழில் கடந்த வாரம் "செயல்படாத சிக்னல்: வாகன ஓட்டிகள் பாதிப்பு' என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இச்செய்தியின் எதிரொலியாக கடந்த இரு நாள்களாக சிக்னலை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.