மார்ச் 16,17-ல் பிச்சாவரத்தில் விடியல்விழா: உதவி ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
விடியல்விழா குறித்த ஆலோசனைக்கூட்டம் சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. உதவி ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். வட்டாட்சியர் க.தனசிங் முன்னிலை வகித்தார். கூ
சிதம்பரத்தை அடுத்த பிச்சாவரம் எம்ஜிஆர் திட்டில் வருகிற மார்ச் 16,17-ல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித்துறை சார்பில் விடியல் விழா நடைபெறுகிறது.
விடியல்விழா குறித்த ஆலோசனைக்கூட்டம் சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. உதவி ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். வட்டாட்சியர் க.தனசிங் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கிள்ளை பேரூராட்சி தலைவர் செ.வித்தியாதித்தன், பிச்சாவரம் சுற்றுலா அலுவலர் உதயகுமார், தீயணைப்பு மீட்புத்துறை அதிகாரி ஜகாங்கீர்முகமது, ஹோட்டல் சாரதாராம் மேலாளர் ராஜசேகர் மற்றும் மீன்வளத்துறை, வனத்துறை, மின்வாரிய அதிகாரிகள், பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின உயராய்வு மைய பேராசிரியர்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழக யோகா மையம் மற்றும் இசைத்துறை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் எம்ஜிஆர் திட்டு தீவினை சுத்தப்படுத்துவது, சு்ற்றுலா பயணிகள் ஏற்றிச் செல்ல படகுகள் ஏற்பாடு செய்வது, கலைநிகழ்ச்சிகள், யோகா, இசை நிகழ்ச்சிகள் நடத்துவது உள்ளிட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. பிச்சாவரத்தில் கடந்த 2004-ம் ஆண்டு அப்போதைய சிதம்பரம் உதவி ஆட்சியர் ராஜேந்திரத்னூவால் விடியல்விழா தொடங்கப்பட்டது. பின்னர் ராஜேந்திரரத்னு ஆட்சியராக பொறுப்பேற்ற பின்பு 2008-ம் ஆண்டு விடியல் விழா கொண்டாடப்பட்டது. சுனாமிக்கு பிறகு இவ்விழா கொண்டாடப்படவில்லை. அதன் பின்னர் மீண்டும் ஆட்சியராக பொறுப்பேற்ற ராஜேந்திரரத்னூ மீண்டும் 2012ம் ஆண்டு மார்ச்17-ம் தேதி பிசசாவரம் எம்ஜிஆர் திட்டில் விடியல்விழா கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
விடியல் விழாவை முன்னிட்டு மார்ச்.16-ம் தேதி மாலை கரகாட்டம், ஓயிலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட நாட்டுபுறக் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மார்ச் 17-ம் தேதி ஞாயிற்றுகிழமை அதிகாலை சூரியஉதயம் நிகழ்ச்சி, பரதநாட்டியம், யோகா ஆகியவை நடைபெறுகிறது. இவ்விழாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நடத்தப்படுகிறது என உதவிஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தெரிவித்தார்.