பாதுகாப்புக்கு கூடுதல் போலீஸார்
சிதம்பரம் காவல் கோட்டத்தில் பாதுகாப்புக்காக கூடுதலாக தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீஸார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சிதம்பரம் காவல் கோட்டத்தில் பாதுகாப்புக்காக கூடுதலாக தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீஸார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சிதம்பரம் பகுதியில் தொடர் திருட்டு, கொள்ளை, வழிப்பறி, பஸ் கண்ணாடி உடைப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதை அடுத்து சிதம்பரம் காவல் கோட்டத்தில் பாதுகாப்புக்குக் கூடுதலாக சிறப்பு காவல் படை போலீஸார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பழனியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 14-வது பட்டாலியனைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் மரியகாமராஜர் தலைமையில் இரு சப்-இன்ஸ்பெக்டர்கள், 62 போலீஸார் அனுப்பி வைக்கப்பட்டு, அவர்கள் ராமகிருஷ்ணா வித்யாசாலா மேல்நிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் சிதம்பரம் காவல் கோட்டத்தில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வர் என போலீஸார் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement