முகப்பு
கடலூர்

காப்பீட்டுக்கழக ஊழியர் சங்க மாநாடு குறித்த வேன் பிரச்சாரம்: கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

சிதம்பரத்தில் காப்பீட்டுக்கழக ஊழியர் சங்க மாநாடு குறித்த வேன் பிரசாரத்தை கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:30 AM
பகிர்:

சிதம்பரத்தில் காப்பீட்டுக்கழக ஊழியர் சங்க மாநாடு குறித்த வேன் பிரசாரத்தை கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஆக 17.18 தேதிகளில் காப்பீட்டுக்கழக ஊழியர்  சங்க வேலூர் கோட்ட 27-வது மாநாடு நடைபெற உள்ளதை முன்னிட்டு ஆக.16-ந்தேதி

கடலூர் மாவட்டம் முழுவதும் மாநாட்டின் நோக்கங்களை வலியுறுத்தி வேன் பிரச்சாரம் நடைபெறுகிறது.

சிதம்பரம் காந்திசிலை அருகே வேன் பிரசாரம் தொடக்க நிகழ்ச்சி காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க கோட்ட இணைச் செயலாளர் சி.வெங்கடேசன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்துப் பேசினார்.  காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கத்தின் கிளைச் செயலாளர் யோகநாதன், முகவர்கள் சங்க நிர்வாகிகள் முகமதுஅலி, சம்பந்தமூர்த்தி, அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் மகாலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரையாற்றினர். பின்னர் சிதம்பரம் நகரில் தெற்குசன்னதி, மேலவீதி உள்ளிட்ட இடங்களில் வேன் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. பிரசாரத்தில் இன்ஸ்யூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டு உயர்வை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.