சிதம்பரத்தில் வீடு ஒன்றில் புகுந்த மர நாய்: மீட்டு பிச்சாவரம் காட்டில் விடப்பட்டது
சிதம்பரம் காமாட்சி அம்மன் கோயில் தெருவில் உள்ள கலியபெருமாள் என்பவது வீட்டிற்குள் மரநாய் ஒன்று புகுந்து வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தி வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனவர் பி.சோமசுந்தரம், வனக்காப்பாளர்
சிதம்பரம் நகரில் வீடு ஒன்றில் புகுந்த மரநாயை வனத்துறையினர் மீட்டு காட்டில் விட்டனர்.
சிதம்பரம் காமாட்சி அம்மன் கோயில் தெருவில் உள்ள கலியபெருமாள் என்பவது வீட்டிற்குள் மரநாய் ஒன்று புகுந்து வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தி வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனவர் பி.சோமசுந்தரம், வனக்காப்பாளர் எம்.செல்வராஜ் ஆகியோர் சென்று கூண்டு வைத்து காத்திருந்து மரநாயை பிடித்தனர். பின்னர் மரநாயை பாதுகாப்பாக கொண்டு சென்று பிச்சாவரம் காப்புக்காட்டில் விட்டனர்.