காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூரில் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் எஸ்.சத்தியராஜ்மோகன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ப.செல்வமணி பேசினார். துணைத் தலைவர் எம்.முருகவேல், அமைப்பு செயலர் எஸ்.செந்தில்குமார், செயலர் கே.இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் காலியாகவுள்ள 200 மருந்தாளுநர்கள் பணியிடங்களை நிரப்பவேண்டும். மாறுதல் கலந்தாய்வு கூட்டம் அரசு விதிப்படி நடத்தவேண்டும், அரசு ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை அரசாணைகளாக வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 6 ஆம் தேதி மாநில அளவில் சென்னையில் தலைமைச் செயலகம் முன் தர்னா நடைபெறவுள்ளது எனவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.