கடலூர்

போலி மருத்துவர்கள் இருவர் கைது

DIN

கடலூர் மாவட்டத்தில் உரிய படிப்பு படிக்காமல் மருத்துவம் பார்த்ததாக இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் உரிய படிப்பு படிக்காமல் சிலர் மருத்துவ சிகிச்சை அளிப்பதாக புகார் எழுந்தது. இதனையடுத்து உரிய நடவடிக்கை எடுத்திட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்படி மங்கலம்பேட்டை அருகே உள்ள கோ.பூவனூரில் மெடிக்கல் நடத்துவதற்கு அனுமதி பெற்றிருப்பவர், நோயாளிகளுக்கு ஊசி போடுவதோடு சிகிச்சையும் அளித்து வருவதாக அரசுக்கு புகார் வந்தது. இதனடிப்படையில் விருத்தாசலம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சாமிநாதன் மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த உதவி ஆய்வாளர் காமராஜ், சனிக்கிழமை கோ.பூவனூரில் மெடிக்கல் கடையில் சோதனை நடத்தினார். அதனை நடத்தி வரும் திட்டக்குடி வட்டம் பாசிகுளத்தைச் சேர்ந்த செல்வராசு மகன் கார்த்திகேயன் (36) என்பவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோல உரிய மருத்துவப் படிப்பு படிக்காமல் கம்மாபுரத்தில் வீட்டில் வைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்ததாக ராமச்
சந்திரன் (60) என்பவரை கம்மாபுரம் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT