கடலூர்

சாலை வசதிகள்: எம்.எல்.ஏ. ஆய்வு

தினமணி

சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பரங்கிப்பேட்டை ஒன்றியம், கடற்கரையோர பகுதிகளில் சாலை வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.பாண்டியன், ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
 சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் தமது தொகுதிக்கு உள்பட்ட பரங்கிபேட்டை ஒன்றியம், கடற்கரையோர கிராமங்களான குமாரபேட்டை, சாமியார்பேட்டை, வேளங்கிராயன்பேட்டை, புதுக்குப்பம், புதுப்பேட்டை, சின்னூர் உள்ளிட்ட மீனவ கிராமப் பகுதிகளில் சாலை வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
 ஆய்வின் போது, அனைத்து கிராமங்களிலும் புதிதாக சாலைகள் அமைக்கவும், சேதமடைந்துள்ள தார் சாலைகள் மற்றும் சிமென்ட் சாலைகள் குறித்து கணக்கெடுத்து மதிப்பீடு செய்து விரிவான அறிக்கை அளிக்கவும் அதிகாரிகளை கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டார்.ஒன்றியச் செயலர் அசோகன், சிதம்பரம் நகரச் செயலர் ஆர்.செந்தில்குமார், ஒன்றிய அவைத் தலைவர் ராசாங்கம், இணைச் செயலர் ரெங்கம்மாள், ஊராட்சிச் செயலர் தன.கோவிந்தராஜன், புவனகிரி ஜெயசீலன், மாவட்ட பிரதிநிதி செல்வகணபதி, நிர்வாகிகள் வீராசாமி, மாரிமுத்து, சௌந்தராஜன் பாஸ்கர், கணேஷ், ஞானசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேவதாஸ், சிவஞானம், பொறியாளர்கள் சந்தானகிருஷ்ணன், சுரேஷ், விஜயரகுநாத் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

SCROLL FOR NEXT