கடலூர்

மணல் கடத்தல்: 12 மாட்டு வண்டிகள் பறிமுதல்

தினமணி

வெவ்வேறு பகுதிகளில் மணல் கடத்தல் தொடர்பாக 12 மாட்டு வண்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
 திட்டக்குடி காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் உதவி ஆய்வாளர்கள் வேம்பு, வினோத்ராஜ் ஆகியோர் திங்கள்கிழமை தனித் தனியாக வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது 7 மாட்டு வண்டிகளில் உரிய அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்றதாக 7 பேரை கைது செய்தனர். மேலும் மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.
 இதேபோல ஆவினங்குடி காவல் நிலையத்துக்குள்பட்ட பட்டூரில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிச் சென்றதாக 3 பேரை உதவி ஆய்வாளர் காமராஜ் கைது செய்தார். மேலும் மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தார்.
 மேலும், ரெட்டிச்சாவடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜசேகரன், பண்ருட்டி உதவி ஆய்வாளர் அழகிரி ஆகியோர் தங்களது காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு தலா ஒரு மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT