கடலூர்

திமுக பிரமுகர் கொலை வழக்கில் 3 பேர் கைது; இருவர் சரண்

DIN

வடலூரில் திமுக பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். மேலும் இருவர் சிதம்பரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
 வடலூர் ஓபிஆர் பிளாட் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (44). வடலூர் பேரூராட்சி, 17-ஆவது வார்டு திமுக செயலரான இவர், வடலூரில் உணவகமும், நெய்வேலி சாலையில் மதுபானக் கூடமும் நடத்தி வந்தார்.
மதுபானக் கூடம் நடத்துவதற்காக ரவிச்சந்திரன் அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலருக்கு பணம் கொடுத்து வந்தாராம். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, நெடுஞ்சாலைகள் ஓரமிருந்த மதுக் கடைகள் மூடப்பட்ட போதும், ரவிச்சந்திரன் தனது மதுக் கூடத்தில் கள்ளத்தனமாக மது விற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு பணம் கேட்டு ஒரு கும்பல் மிரட்டல் விடுத்ததாம். ஆனால், ரவிச்சந்திரன் கொடுக்க மறுத்துவிட்டாராம்.  இந்த நிலையில் நெய்வேலி சாலையில் உள்ள ஒரு மருந்தகத்துக்கு புதன்கிழமை இரவு சென்ற ரவிச்சந்திரன் மாத்திரைகள் வாங்கி விட்டு, அந்தப் பகுதியில் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதைத் தடுக்க முயன்ற அவரது நண்பர் அருண்குமாரையும் அந்தக் கும்பல் வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதில் ரவிச்சந்தரின் உயிரிழந்தார்.  சம்பவம் குறித்து, புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அருண்குமார் அளித்த புகாரின் பேரில், வடலூரைச் சேர்ந்த அருண்பாண்டியன் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரை வடலூர் போலீஸார் தேடி வந்தனர்.  இதில், விருத்தாசலம் மணலூரைச் சேர்ந்த சதீஷ் (28), ராமர் கோயில் தெரு பிரேம் (20), வடலூர் புதுத்தெரு மெர்லின் (28) ஆகியோரை நெய்வேலியில் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
 மேலும், வழக்கில் தொடர்புடைய அருண்பாண்டியன், கவியரசன் ஆகியோர் சிதம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி மணி விழா மெட்ரிக். பள்ளி 100% தோ்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 92.91% தோ்ச்சி

புதுச்சேரி, காரைக்காலில் 55 பள்ளிகள் 100% தோ்ச்சி

சிதம்பரம் பள்ளிகள் தோ்ச்சி விவரம்

பாரதி மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

SCROLL FOR NEXT