கடலூர்

ஓய்வூதியர்களின் மருத்துவப் படியை உயர்த்த வலியுறுத்தல்

தினமணி

ஓய்வூதியர்களின் மருத்துவப் படியை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
 தமிழக ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் மாதாந்திர சிறப்புக் கூட்டம் கடலூரில் மாநிலத் தலைவர் மா.கண்ணன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. பொதுச் செயலர் பாபு.சுப்ரமணியன் சென்ற மாத கூட்ட அறிக்கையும், பொருளாளர் ர.திருநாவுக்கரசு வரவு-செலவு அறிக்கையும் வாசித்தனர்.
 கூட்டத்தில், ஓய்வூதியர்களின் மருத்துவப் படியை மத்திய அரசு ரூ.ஆயிரமாக உயர்த்தியதைப் போல தமிழக அரசும் உயர்த்த வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-ஆவது ஊதியக் குழுவில் ஊதிய மாற்றம் செய்து, பணப் பயனை வழங்கியதைப் போல மாநில அரசும் தனது 8-ஆவது ஊதியக்குழுவில் உரிய மாற்றம் செய்து பணப் பயனை 2016-ஆம் ஆண்டு ஜனவரி முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு வருமான வரியிலிருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 கூட்டத்தில் நிர்வாகிகள் ஆர்.ராதாகிருஷ்ணன், ஏ.செயராமன், ஆர்.திருநாராயணன், எஸ்.அன்பழகன், வி.ரங்கநாதன், ஆர்.தனராஜ், ஆர்.ஜோதி, ஏ.பேட்ரிக், பி.குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 முன்னதாக நிர்வாகி எம்.தண்டபாணி வரவேற்றார். துணைச் செயலர் ஆர்.செந்தாமரைக்கண்ணன் நன்றி கூறினார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT