கடலூர்

இந்தி அரைத் திங்கள் விழா

தினமணி

என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் இந்தி அரைத் திங்கள் தொடக்க விழா, நெய்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
 இந்திய அரசு ஆட்சி மொழியாக இந்தியை அறிவித்ததை முன்னிட்டு, என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இந்தி அரைத் திங்கள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான விழா, கற்றல் மற்றும் மேம்பாட்டு மையத்தில் நடைபெற்றது.
 என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கத் துறை செயல் இயக்குநர் சையத் அப்துல் பஃதேக் காலித் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடக்கி வைத்தார். (படம்) சிறப்பு சுரங்க இயந்திரங்கள், கன்வேயர் துறை செயல் இயக்குநர் எம்.ராஜசேகர் வாழ்த்துரை ஆற்றினார்.
 இந்தி அரைத் திங்கள் விழாவை முன்னிட்டு, மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நிலக்கரித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் அனுப்பிய வாழ்த்துச் செய்திகள் வாசிக்கப்பட்டன.
 இந்தி மொழியை அஞ்சல் வழியில் பயின்று தேர்வு எழுதியவர்களில் முதல் 3 இடங்களைப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT