கடலூர்

நீதித் துறையில் 92 காலிப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க அழைப்பு

DIN

கடலூர் மாவட்ட நீதித் துறையில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதன்மை மாவட்ட நீதிமன்றம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணியில் காலியாக உள்ள பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு, எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
அதன்படி, கணினி இயக்குபவர் 5, தட்டச்சர் (தாற்காலிகப் பணி அடிப்படையில்) 20, முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர் 8, இளநிலை கட்டளை நிறைவேற்றுநர் 13, ஜெராக்ஸ் ஆபரேட்டர் 14, அலுவலக உதவியாளர் 22, இரவுக் காவலர் 3, முழு நேர மசால்ஜி 4, துப்புரவுப் பணியாளர் 3 ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
இதுதொடர்பான விவரங்களுக்கு
ங்ஸ்ரீர்ன்ழ்ற்ள்.ஞ்ர்ஸ்.ண்ய்/ற்ய்/ஸ்ரீன்க்க்ஹப்ர்ழ்ங் என்ற இணையதள முகவரியை காணலாம். விண்ணப்பதாரர்களின் அடிப்படை கல்வித் தகுதி, வயது வரம்பு, இன சுழற்சி விவரம், தேர்வு முறை, விண்ணப்பப் படிவம், அனைத்து தகவல் பரிமாற்றங்கள், தேர்வு நேர்காணலுக்கு அழைப்பு ஆகிய விவரங்கள் மேற்படி இணையதள வலைதளத்திலேயே வெளியிடப்படும்.
விண்ணப்பங்களை, முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், கடலூர் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் வருகிற 28-ஆம் தேதி என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT