சாராயம் விற்றதாக இருவர் கைது
பண்ருட்டி பகுதியில் கள்ளச் சாராயம் விற்பனை செய்ததாக இருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 70 லிட்டர் சாராயத்தைப் பறிமுதல் செய்தனர்.
பண்ருட்டி பகுதியில் கள்ளச் சாராயம் விற்பனை செய்ததாக இருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 70 லிட்டர் சாராயத்தைப் பறிமுதல் செய்தனர்.
பண்ருட்டி காவல் சரகப் பகுதியில் கள்ளச் சாராயம் விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், புதுப்பேட்டை காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீஸார் புதுப்பேட்டை மற்றும் காடாம்புலியூர் பகுதிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது எஸ்.ஏரிப்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தியதில், அங்கு சாராயம் விற்ற தாமரை(27) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல, சேமக்கோட்டை ஏரிக்கரையில் சர்க்கரை(75) என்பவரை கைது செய்த போலீஸார், அவரிடம் 60 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.