கடலூர்

வடக்குத்து ஊராட்சியில்பூங்கா அமைக்கும் பணி தொடக்கம்

DIN


வடக்குத்து ஊராட்சியில் பொதுமக்கள் பங்களிப்புடன் பூங்கா அமைக்கும் பணியை, நெய்வேலி தொகுதி
எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.
குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வடக்குத்து ஊராட்சி, ஸ்ரீராம் நகரில் பூங்காவுக்காக இடம் தேர்வு செய்யப்பட்டு, முதல் கட்டமாக பூங்கா கம்பி வேலி அமைத்தனர். இந்த நிலையில், பூங்கா அமைக்கும் பணிகளை எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் சனிக்கிழமை மரக் கன்று நட்டு தொடக்கி வைத்தார். நிகழ்வில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்டோர் மரக் கன்றுகளை பூங்கா வளாகத்தில் நட்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி ஞானமணி, ஊராட்சி திமுக செயலர் ஏழுமலை, அவைத் தலைவர் சந்திரசேகரன், நெய்வேலி நகரச் செயலர் பக்கிரிசாமி, காந்திநகர் ஜமாத் தலைவர் அப்துல் ரஹீம், முன்னாள் நகர துணைச் செயலர் கொளஞ்சியப்பன், வடக்குத்து ஊராட்சி செயலர் மணிவாசகம், ராம.வெங்கடேசன், செல்வராசு, ராஜமாணிக்கம், சபரிமுத்து, குமார், ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT