கடலூர்

ஊருக்குள் புகுந்த முதலை!

DIN

காட்டுமன்னார்கோவில் அருகே ஊருக்குள் புகுந்த முதலையை கிராம இளைஞர்கள் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
 காட்டுமன்னார்கோவிலை அடுத்த சிவாயம் கிராமத்தில் வடக்குத் தெருவில் செவ்வாய்க்கிழமை காலை வயல்வெளி பகுதிக்குச் பெண்கள் சென்றனர். அப்போது வயலில் முதலை ஒன்று ஊர்ந்து வந்ததைப் பார்த்து சப்தமிட்டனர்.
 உடனடியாக வந்த கிராம இளைஞர்கள் போராடி முதலையை பிடித்து கட்டி தெருவுக்கு தூக்கி வந்தனர் .
 இது குறித்து சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடன் வந்த வனத்துறையினர் முதலையை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வக்காரமாரி குளத்தில் கொண்டுபோய் விட்டனர்.
 ஒவ்வொரு முறையும் கிராமங்களில் புகுந்த முதலைகளை பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைப்பதும், அதனை வக்காரமாரி குளத்தில் விடுவதும், மீண்டும் அந்த முதலைகள் வெளியேறி கிராமங்களில் புகுவதுமாக இருந்து வருகிறது என பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

SCROLL FOR NEXT