அங்கன்வாடி மையத்தில் ஆய்வு
திட்டக்குடி அருகே தி.இளமங்கலம் அங்கன்வாடி மையத்தில் சி.வெ.கணேசன் எம்எல்ஏ சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
திட்டக்குடி அருகே தி.இளமங்கலம் அங்கன்வாடி மையத்தில் சி.வெ.கணேசன் எம்எல்ஏ சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
திட்டக்குடி அருகே உள்ளது தி.இளமங்கலம் கிராமம். இங்கு செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் திட்டக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சி.வெ.கணேசன் சனிக்கிழமை நேரில் சென்றுஆய்வு செய்தார். அப்போது, அங்கன்வாடி மையத்தால் பயன்பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை, வழங்கப்படும் உணவின் அளவு குறித்து அங்கன்வாடிப் பணியாளர்களிடம் அவர் கேட்டறிந்தார். தொடர்ந்து பார்வையாளர் பதிவேட்டில் தனது கருத்தைப் பதிவு செய்து, கையொப்பமிட்டார். மங்களூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலர் பட்டூர் அமிர்தலிங்கம், நகரச் செயலர் பரமகுரு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.