முகப்பு
கடலூர்

விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்

தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சிறப்பு மருத்துவ முகாம் சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதிக்கு

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சிறப்பு மருத்துவ முகாம் சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட பரங்கிப்பேட்டை ஒன்றியம், சேந்திரக்கிள்ளை ஊராட்சியில் அண்மையில் நடைபெற்றது.
முகாமுக்கு வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் அமுதா பெருமாள் தலைமை வகித்தார். நகர்மன்ற முன்னாள் தலைவர் எம்.எஸ்.என்.குமார், துணைத் தலைவர் ரா.செந்தில்குமார், ஒன்றிய முன்னாள் தலைவர் அசோகன், துணைத் தலைவர் ராசாங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவ அலுவலர் பிரியா வரவேற்றார். சிறப்பு மருத்துவ முகாமை சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் தொடக்கி வைத்தார்.
முகாமில், டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு,  ஊட்டச்சத்து பொருள்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன. 
பரங்கிப்பேட்டை நகர அதிமுக செயலர் மாரிமுத்து, நிர்வாகிகள் செழியன், ஆறுமுகம், பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கவரப்பட்டு வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் இருதயராஜ் (சுகாதாரம்),  அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவர் அனுஷ்சுந்தர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். கவரப்பட்டு சுகாதார ஆய்வாளர் ரகுசந்திரன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.