முகப்பு
கடலூர்

புதை சாக்கடை திட்டம்: குறைகளைச் சரி செய்யக் கோரி மனு 

கடலூரில் புதை சாக்கடை திட்டத்தால் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை மாவட்ட ஆட்சியர் தலையிட்டு சரி செய்ய வேண்டும் என,

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:13 PM
பகிர்:

கடலூரில் புதை சாக்கடை திட்டத்தால் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை மாவட்ட ஆட்சியர் தலையிட்டு சரி செய்ய வேண்டும் என, அனைத்து குடியிருப்போர்கள் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.மருதவாணன் கேட்டுக் கொண்டார்.
 இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு அவர் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
 கடலூர் நகரில் புதை சாக்கடை திட்டம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், இது சிறப்பாகச் செயல்படுமா என்ற குழப்பத்தில் குடியிருப்பு வாசிகள் பலர் இன்னும் இணைப்புக் கொடுக்கவில்லை. பலர் முறையற்ற இணைப்பைக் கொடுத்துள்ளனர்.
 நீர் உந்து நிலையம் (பம்பிங் ஸ்டேஷன்) 24 மணி நேரமும் இயங்க போதிய பணியாளர்கள், நிதி இல்லாத காரணத்தால் சில மணி நேரம் மட்டுமே இயங்குகிறது.
 இதர நேரங்களில் தாழ்வான இடங்களில் கழிவு நீர் ஆள் இறங்கும் குழி (மேன் ஹோல்) வழியாக பெருக்கெடுத்து ஓடி, சுகாதாரக் கேட்டை விளைவிக்கிறது. அடைப்பைச் சரி செய்யும் நவீன இயந்திரங்கள் நகராட்சியில் இல்லை. இருக்கும் இயந்திரமும் பழுதாகியுள்ளது.
 33 வார்டுகளில் மேன் ஹோல் மூடி உடைந்து விபத்தையும், சுற்றுச்சூழல் சீர்கேட்டையும் ஏற்படுத்தி வருகிறது. பல வீடுகளில் கழிவு நீர் உள்ளே புகுந்துள்ளது. புதை சாக்கடை திட்டத்தை நிர்வகிப்பது நகராட்சியா அல்லது குடிநீர் வடிகால் வாரியமா என்ற சர்ச்சை உள்ளதால், இருதுறையினரும் இதனைக் கவனிக்காமல் உள்ளனர்.
 எனவே, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு மேற்கண்ட பிரச்னைகளை சரி செய்ய வேண்டும். மேலும் 24 மணி நேரமும் செயல்படும் புகார் மையம் ஒன்றை உருவாக்கி மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டுமென மனுவில் தெரிவித்துள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →