அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்
கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவது, புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்குதல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டன.
கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட அதிமுக செயலரும், தொழில்துறை அமைச்சருமான எம்.சி.சம்பத் பேசியதாவது: அனைத்து கிராமங்கள், வார்டுகளிலும் உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தி தொகுதிக்கு 40 ஆயிரம் பேரைச் சேர்க்க வேண்டும்.
எம்.ஜி.ஆரால் தொடங்கி, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட கட்சியைக் காப்பாற்ற வேண்டியது நம் அனைவரின் கடமை. இந்தக் கடமை உணர்ச்சியுடன் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.
முன்னாள் அமைச்சர் எம்.சி.தாமோதரன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத்தின் துணைச் செயலர் சொரத்தூர் இரா.ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலர் கே.முருகுமணி, ஜெயலலிதா பேரவைச் செயலர் பி.ரவிச்சந்திரன், எம்.ஜி.ஆர். மன்றச் செயலர் ஜி.ஜெ.குமார் உள்ளிட்டோர் பேசினர்.
ஒன்றியச் செயலாளர்கள் என்.பி.கந்தன், பச்சமுத்து, நகரப் பேரவைச் செயலர் வ.கந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, கடலூர் நகர அதிமுக செயலர் ஆர்.குமரன் வரவேற்றார்.
கடலூர் ஒன்றியச் செயலர் பிவிஜெ.முத்துகுமாரசாமி நன்றி கூறினார்.