கடலூர்

சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தினமணி

நெல்லிக்குப்பம் நகராட்சியின் சொத்து வரி உயர்வைக் கண்டித்து, நெல்லிக்குப்பம் நகர அனைத்துத் தொழில் வர்த்தக சங்கத்தினர் பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 அந்தச் சங்கத் தலைவர் சேக் தாவூத் தலைமை வகித்தார். செயலர் ராமலிங்கம், பொருளாளர் சம்சுதீன், சட்ட ஆலோசகர் ராம்சிங், நிர்வாகிகள் அமரநாதன், ரவி, சுரேஷ், கருணாகரன், நாசர், ஆனந்த், ஸ்ரீதர், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட சுமார் 300-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
 நகராட்சி நிர்வாகம் 13 அரையாண்டு வரியைச் சேர்த்து வசூல் செய்வதை நிறுத்த வேண்டும். தமிழக அரசும், உள்ளாட்சித் துறை அமைச்சரும் வரி வசூல் செய்வதை நிறுத்தக் கோரி அரசாணை வெளியிட வேண்டும்.
 பிறப்பு - இறப்பு சான்றுகள் 48 மணி நேரத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

SCROLL FOR NEXT