கடலூர்

நத்தவெளிச் சாலையில் குடியிருப்போர் மாற்று இடம் கோரி மனு 

தினமணி

மாற்று இடம் கோரி நத்தவெளிச் சாலையில் குடியிருப்போர் சர் ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனர்.
 கடலூர் திருப்பாதிரிபுலியூரில் சரவணா நகர் இணைப்புச் சாலை அமைக்கும் பணி நீண்ட இழுபறிக்குப் பின்னர் தொடங்கியுள்ளது. இந்தச் சாலைப் பணிக்காக நத்தவெளிச் சாலையில் ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்போரை அகற்றும் பணியை வருவாய்த் துறையினர் தொடங்கினர். அதன் முதல் கட்டமாக ஆக்கிரமிப்பு பகுதிக்குச் சென்ற வருவாய்த் துறையினர் ஒலிபெருக்கி மூலம் ஆக்கிரமிப்பு செய்திருப்பவர்கள் தாங்களாகவே முன் வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டுமென அறிவித்தனர்.
 இதனையடுத்து, நத்தவெளிச்சாலையைச் சேர்ந்த பொதுமக்கள் புதன்கிழமை கடலூர் சார் ஆட்சியர் அலுவலகம் வந்து சார் ஆட்சியர் ஜானிடாம் வர்கீûஸ சந்தித்து மனு அளித்தனர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதியில் நீண்ட காலமாக குடியிருந்து வருவதால் உடனடியாக வீடுகளை காலி செய்ய முடியாது.
 மேலும், தங்களின் வாழ்வாதாரம், குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட முக்கியத் தேவைகள் கடலூர், திருப்பாதிரிபுலியூர் பகுதியைச் சுற்றியே உள்ளதால் வீடுகளை காலி செய்வதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டுமென மனுவில் வலியுறுத்தியிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT