முகப்பு
கடலூர்

நிலப் பிரச்னை: குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

நிலப் பிரச்னை தொடர்பாக குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால், விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை பரபரப்பு ஏற்பட்டது

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

நிலப் பிரச்னை தொடர்பாக குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால், விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
 வேப்பூர் வட்டம், மன்னம்பாடியைச் சேர்ந்தவர் மு.கணபதி (40). இவருக்குச் செந்தமிழ்ச்செல்வி (35) என்ற மனைவியும், கெüசல்யா (10), லோகேஷ் (8) என்ற இரு குழந்தைகளும் உள்ளனர். குடும்பத்தினருடன் அங்குள்ள நத்தம் புறம்போக்கில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்துள்ளார். அதே முகவரியில் குடும்ப அட்டை, மின் இணைப்பு பெற்றுள்ளார்.
 இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர், அவர் வசித்து வந்த மூன்றரை சென்ட் இடத்தை போலிச் சான்றிதழ்கள் மூலமாக கிரையம் செய்ததாகக் கூறப்படுகிறது.
 இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, வேப்பூர் வட்டாட்சியர், விருத்தாசலம் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் கணபதி மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
 எனவே, நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து மனைவி, குழந்தைகளுடன் புதன்கிழமை விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்த அவர், உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைக்க முயன்றார்.
 அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவரைத் தடுத்து, விருத்தாசலம் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு இதுதொடர்பாக அவரின் விசாரணை நடைபெற்றது.
 

முழு கட்டுரையைப் படிக்க →