முகப்பு
கடலூர்

கல்லூரியில் தேசியக் கருத்தரங்கம்

காட்டுமன்னார்கோவிலில் உள்ள எம்.ஆர்.கே. இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில், இயந்திரவியல் துறை மாணவர்களுக்கான தேசிய அளவிலான கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

காட்டுமன்னார்கோவிலில் உள்ள எம்.ஆர்.கே. இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில், இயந்திரவியல் துறை மாணவர்களுக்கான தேசிய அளவிலான கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
 நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவர் எம்.ஆர்.கே.பி.கதிரவன் தலைமை வகித்தார். சென்னை ஐஐடி பேராசிரியர் கே.சம்பத் கருத்தரங்கை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று, தங்களது தொழில்நுட்பக் கட்டுரைகளை வழங்கினர். கருத்தரங்கில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழக உதவி பேராசிரியர் ராஜமோகன், அரியலூர் அண்ணா பல்கலைக்கழக இயந்திர பொறியியல் துறைத் தலைவர் ஜி.சத்யபிரியா, எம்ஆர்கே இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி முதல்வர் கே.ஆனந்தவேலு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் அனைத்து துறை பேராசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர். முடிவில் இயந்திரவியல் துறைத் தலைவர் கே.திருவரசமூர்த்தி நன்றி கூறினார்.
 
 

முழு கட்டுரையைப் படிக்க →