முகப்பு
கடலூர்

வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகைகள் திருட்டு

சிதம்பரம் ராஜலட்சுமி நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

சிதம்பரம் ராஜலட்சுமி நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
 சிதம்பரம் ராஜலட்சுமி நகரைச் சேர்ந்தவர் சேகர் மகள் ரம்யா (27). இவரின் தந்தை வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். வீட்டில் தனியாக வசித்து வரும் ரம்யா, தனது தாயுடன் வீட்டைப் பூட்டிக் கொண்டு கோயம்புத்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு பிப்ரவரி 16-ஆம் தேதி சென்றனர். பிப்ரவரி 19-ஆம் தேதி மாலை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக வீட்டின் அருகில் வசிப்பவர்கள் தொலைபேசியில் ரம்யாவுக்குத் தெரிவித்தனர். இதனையடுத்து, ரம்யா சிதம்பரம் வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 7 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 12.500 ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து சிதம்பரம் நகரக் காவல் நிலையத்தில் ரம்யா அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.