தீ விபத்தில் குடிசை சேதம்
நெய்வேலி அருகே தீ விபத்தில் குடிசை சேதமடைந்தது.நெய்வேலி, தெர்மல் காவல் சரகம், அம்மேரியை அடுத்துள்ள தொப்புலிக்குப்பத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ரஞ்சித்குமார்(26).
நெய்வேலி அருகே தீ விபத்தில் குடிசை சேதமடைந்தது.
நெய்வேலி, தெர்மல் காவல் சரகம், அம்மேரியை அடுத்துள்ள தொப்புலிக்குப்பத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ரஞ்சித்குமார்(26). இவர், கடந்த மே 26-ஆம் தேதி குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தார். அப்போது, அவரது குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டில் இருந்த பொருள்கள் எரிந்து நாசமானது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து தெர்மல் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.